பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா; என்ன அவசியம் இருக்கு..? கொந்தளித்த பெற்றோர்!

Tamannaah Tamil Cinema Karnataka Tamil Actress Actress
By Jiyath Jun 27, 2024 03:23 AM GMT
Report

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா இடம்பெற்றுள்ள விவகாரம் சச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை தமன்னா 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா; என்ன அவசியம் இருக்கு..? கொந்தளித்த பெற்றோர்! | Actress Tamannaah In School Text Book Karnataka

'சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் அவரை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில், தமன்னா பிறந்த தேதி, நடித்த திரைப்படங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

பெற்றோர் புகார் 

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மாணவர்களின் பெற்றோர், நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா; என்ன அவசியம் இருக்கு..? கொந்தளித்த பெற்றோர்! | Actress Tamannaah In School Text Book Karnataka

மேலும், இதுதொடர்பாக குழந்தை உரிமை ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.