சாமியார் தோற்றத்தில் தமன்னா - திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணம்
திடீரென சாமியார் தோற்றத்தில் தமன்னாவின் ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. தமிழ் படங்களில் நடிக்காமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
கடைசியாக தமிழில் விஷாலுடன் ஆக்ஷன் படத்தில் அதிரடி காட்டினார். அதன்பின் நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் துணிச்சலான பெண்ணாக நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் அவருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
ஃபோட்டோவால் அதிர்ச்சி
இந்நிலையில், தமன்னா சாமியார் தோற்றத்தில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஈஷாவில் உள்ள லிங்கபைரவி கோவிலுக்குள் நுழையும் போது ஒருவிதமான அருளை என்னால் உணர முடிந்தது. வாழ்க்கை குறித்த பயம், மரணம், ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து வருத்தம் என அனைத்தையும் மாற்றிவிடும்.
இதை நான் உறுதியாக நம்புவதால், லிங்கபைரவி யந்திரத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல நினைத்தேன், இதற்காக ஈஷோ யோகா மையம் ஒரு வழிகாட்டி உள்ளது. அவர்கள் வழிபாடு செய்து லிங்கபைரவி சிலை வீட்டுக்கு தருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.