என்னுடைய தொழில் அதிபர் கணவர் இவர் தான் - முற்றுப்புள்ளி வைத்த நடிகை தமன்னா
பிரபல நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்று பரவிய நிலையில் தமன்னா புகைப்படம் ஒன்றை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமன்னாவிற்கு விரைவில் திருமணம்?
மும்பைச் சேர்ந்த தமன்னாவை முன்னணி நடிகையாக உயர்த்தியது தென்னிந்திய சினிமா. தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் விரைவில் இவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
30 வயதை கடந்த நடிகையாக இருக்கும் தமன்னா மும்பையைச் சேர்ந்த இளம் தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாகவும், இவரின் திருமண ஏற்பாட்டை அவரின் குடும்பத்தினர் மும்முரமாக செய்து வருவதாக கூறப்பட்டது.
இதையடுத்து தமன்னாவிற்கு திருமணம் என்று இணையத்தில் தகவல் பரவியதை அடுத்து ரசிகர்கள் தமன்னாவிற்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
முற்றுப்புள்ளி வைத்த தமன்னா
இந்த நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமன்னா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் மீசைகள் வைத்துக் கொண்டு பச்சை நிறத்தில் டி- சர்ட் அணிந்து கொண்டு இவர் தான் தனது தொழிலதிபர் கணவர் என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் தமன்னா திருமணம் குறித்து பரவுவது வெறும் வதந்தி தகவல் தான் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே தமன்னாவுக்கு திருமணம் என உற்சாகமா இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.