படுக்கையறை சீனில் உணர்வு இப்படிதான் இருக்கும்; நடிகர்கள் பாவம் - தமன்னா ஓபன் டாக்!!
நெருக்கமான காட்சிகள் மற்றும் ஆண் நடிகர்களின் உணர்வுகள் குறித்து நடிகை தமன்னா பேசியுள்ளார்.
நடிகை தமன்னா
கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன், தில்லாலங்கடி, பையா, வீரம், தர்மதுரை, கண்ணே கலைமானே, ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியா இவர் நடிப்பில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக தமன்னா இருந்து வருகிறார்.
நெருக்கமான காட்சிகள்
இந்நிலையில் திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகள் மற்றும் ஆண் நடிகர்களின் உணர்வுகள் குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் பேசியுள்ளார். தமன்னா கூறியதாவது "அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை.
மாறாக நடிகையை விட அவர்கள் பதட்டமாகவும், சங்கடமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பெண் நடிகை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.