கணவரை பிரிந்த நடிகை.. மேடையில் அந்த நடிகருக்கு முத்தம் - ரசிகர்கள் ஷாக்!
சுப்பிரமணியபுரம் நடிகை ஸ்வாதி நடிகர் ஒருவருக்கு முத்தம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஸ்வாதி
தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்கள் நடித்து வந்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. இவர் தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்து வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இதன்பிறகு, போராளி படத்தில் மீண்டும் சசிக்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். பின்னர் விஜய்சேதுபதியுடன் இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது கணவர் புகைப்படத்தை நீக்கிவிட்டார், இதனால் விவாகரத்து என்ற சர்ச்சை எழுந்தது.
நடிகருக்கு முத்தம்
இந்நிலையில், இவர் ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் மந்த் ஆஃப் மது என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் நடித்த நவீன் சந்திரா, ஸ்வாதி, ஸ்ரேயா நவிலே ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய சாய் தரம் தேஜ், "கல்லூரி நாட்களில் இருந்தே ஸ்வாதி என் சிறந்த தோழி.
இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் ஸ்வாதி" என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த ஸ்வாதி அவரை மேடையிலேயே முத்தம் கொடுத்தார். இதனை கண்ட ரசிகர்கள் மற்றும் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.