அரசியல் பிரமுகரை கரம்பிடித்த பிரபல பாலிவுட் நடிகை - போராட்ட களத்தில் காதல்
நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல் பிரமுகரை திருமணம் செய்துள்ளார்.
ஸ்வரா பாஸ்கர்
டெல்லியைச் சேர்ந்தவர் நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர் ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு, நீல் பட்டி சன்னாட்டா போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், ஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து ஒரு செயற்பாட்டாளராகவும் உள்ளார். இந்நிலையில், ஸ்வரா பாஸ்கர் அரசியல் பிரமுகர் ஃபஹத் ஜிரார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஃபஹத் ஜிரார், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக உள்ளார். சிஏஏவுக்கு எதிரான போராட்டம், ஆரே காலனியில் மெட்ரோவுக்கா மரம் வெட்டப்படுவதற்கு எதிரான போராட்டம் போன்றவற்றிற்கு குரல் கொடுத்தவர்.
திருமணம்
அதில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின் போது ஸ்வரா பாஸ்கர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தனது திருமண நிகழ்வு குறித்து நடிகை, "சில நேரங்களில் உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றை நீங்கள் தொலைவில் தேடுகிறீர்கள்.
நாங்கள் அன்பைத் தேடினோம், ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் எங்களுக்குள் ஒருவரையொருவர் கண்டுபிடித்தோம்! என் இதயத்திற்கு வருக ஃபஹத் ஜிரார் அகமத்!” எனப் பதிவிட்டுள்ளார்.