பாஜக முக்கிய பிரமுகர் மாரடைப்பால் உயிரிழப்பு - அரசியல் கட்சியினர் இரங்கல்..!
பாஜக நிர்வாகி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான சோனாலி பஹாத் நேற்று மாரடைப்பால் காலமானார்.
சோனாலி பஹாத் காலமானார்
சோனாலி பஹாத் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். பாஜக சார்பில் நடைபெற்ற அந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பின்னர் தோல்வியை தழுவினார்.
அரசியல் வாழ்க்கை மட்டும்மின்றி சினிமாவிலும் பிரபலமாக வளம் வந்த இவர் இந்தி மொழியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ்ஸின் 14 ஆவது சீசனில் போட்டியாளராக பங்குபெற்றார்.
பொதுமக்கள் மத்தியில் பிரபலமான பேசப்பட்து வந்த சோனாலி பஹாத்திற்கு வயது 41 ஆகும். வேலை விஷயமாக கோவா சென்றிருந்த சோனாலி பஹாத் நேற்று மாரடைப்பால் காலமானார்.
இவரின் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோனாலி பஹாத்தின் மறைவுக்கு தற்போது திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சோனாலி போகத்துக்கு யஷோதரா போகத் என்கிற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.