சிறு வயதிலேயே திருமணம்.. சந்தேகப்பட்டு அப்படி பேசுவார், எல்லாமே ஒரு அளவு தான் - கலங்கிய நடிகை!
நடிகை தனது வாழ்க்கை அனுபவத்தை கூறி தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
காமெடி நடிகை
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுமதி. இவர் ஐயா, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர், "எனக்கு 16 வயதிலேயே திருமணம் நடந்தது. சொந்த மாமாவைத்தான் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால், அவர் வேலைக்கு போக மாட்டார் எங்களுக்குள் எப்போதும் சண்டைதான் வரும். அதுமட்டுமில்லாமல் பயங்கரமான சந்தேக புத்தி அவருக்கு இருக்கு இதனால், என்னை சந்தேகப்படுவார்" என்று கூறியுள்ளார்.
நடிகை பேட்டி
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "என் சொந்தக்காரர் ஒருவருடன் என்னை சேர்த்துவைத்து பேசி, சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்தார். ஒரு அளவுக்கு மேல என்னால் பொருத்துக்கொள்ள முடியாமல், மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்னையில் இவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டில் வாழ்ந்தோம்.
அப்போது தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசைவந்தது. அதை என் இரண்டாவது கணவரிடம் சொன்னேன். அதன்பின் பல போராட்டத்திற்கு பின் படவாய்ப்பு வந்தது. வடிவேலு சாருடன் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். நான் பிஸியாக நடித்த போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும்.
ஆனால், இப்போது எல்லாம் 20 ஆயிரம் ரூபாய்க்கூட வருவது இல்லை. வாய்ப்பே கிடைப்பது இல்லை நான் சினிமா, சீரியல் என்று மாத்தி மாத்தி நடித்துக்கொண்டு இருக்கிறேன்.
பல நேரங்களில் வாடகை கட்டக்கூட காசு இல்லாமல் அவதிப்பட்டு இருக்கிறேன். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் சினிமாவில் நன்றாக சம்பாதிப்பார்கள் என நினைப்பார்கள் உண்மையில் அப்படி இல்ல" என்று கூறியுள்ளார்.