நடிகர் கார்த்திக் என்னை மதிக்கவே மாட்டார், யார் உனக்கு வாய்ப்பு குடுத்தானு கேட்டார் - ரகசியம் உடைக்கும் பிரபல நடிகை!
பிரபல முன்னணி நடிகை தனது பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி குறித்து பல ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னணி நடிகை
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை சுலோக்ஷனா.
இவர் 1982-ம் ஆண்டு வெளியான தூரல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் தற்பொழுது அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி குறித்து பல தகவல்களை கூறியுள்ளார்.
பேட்டி
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், "நடிகர் கார்த்தி எப்போதுமே என்னை ஒரு பெண்ணாக மதித்ததே இல்லை, ஷூட்டிங்கி ஸ்பாட்டில் என்னை கிண்டல் செய்வார்.
நடிகர் கார்த்திக் பற்றி பலருக்கும் தெரியும். ஷூட்டிங்க ஸ்பாட்டில் அவர் அனைவரிடமும் நான்றாக பேசி பழகக்கூடியவர்.
என்னுடன் சேர்ந்து நடிக்கும்போது அவர் என்னை ஒரு பெண்ணாக நினைத்ததே கிடையாது. நீ எனக்கு ஒரு பாய் ப்ரண்டு. உன்னை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
உன்னை பார்த்தால் ஒரு பொண்ணு என்ற ஃபீலிங் கொஞ்சம் கூட வரவில்லை என்று கிண்டல் செய்வார்.
மேலும், உனக்கு யாரு நடிக்க வாய்ப்பு கொடுத்தா? ஒரு ஹீல்ஸ் செருப்பு போட்டு நடக்க கூட தெரியல. இவங்களுக்கு நாயகி வாய்ப்பு காடுத்திருக்காங்களே என்று கிண்டல் செய்வார்.
அவர் அப்படி கிண்டல் செய்தாலும் யாருக்கும் அவர் மீது கோபம் வராது. அவரை பார்த்தால் அனைவருக்கும் சிரிப்புதான் வரும்" என்று கூறியுள்ளார்.