கணவரை பிரிந்த நடிகை.. 51 வயதில் இரண்டாம் திருமணம் - மனம் திறந்து பேசிய பிரபலம்!
விவாகரத்து பெற்ற 51 வயது நடிகை மறுமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை சுகன்யா
1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லி புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம்.
ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பேட்டி
இந்நிலையில், இவர் திருமணம் ஆன ஒரு ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டார். தற்பொழுது வரை இவர் வாழ்க்கை துணையின்றி தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மறுமணம் குறித்து பேசியுள்ளார், அதில், "மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை.
அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை. இப்போது எனக்கு 50 வயதாகி விட்டது, இதற்கு பிறகு திருமணம் செய்து, குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? என்று குழப்பமாக இருக்கிறது.
வாழ்வில் நமக்கு ஒரு துணை வேண்டும் என்பது அவசியமான ஒன்று, எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியாது. என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அது நிச்சயம் நடக்கும்" என்று கூறியுள்ளார்.