மறுபிறவி உண்மை'னா...! மறைந்த சூரிய கிரண் குறித்த எமோஷனலான சுஜிதா

Sujitha
By Karthick Mar 15, 2024 03:46 PM GMT
Report

மறைந்த தனது அண்ணன் சூரியகிரண் குறித்து நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா உருக்கமாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

சூரியகிரண்

இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சூரிய கிரண் (48). இவர் மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

actress-sujitha-emotional-post-about-brother-surya

மேலும், சத்யம், தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற தெலுங்கு படங்களை இயக்கி உள்ளார். தமிழில் அரசி என படத்தை இயக்கியுள்ளார். இவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு நடிகை கல்யாணியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தது.

விரைவில் காதல் திருமணம் ...உறுதியான தேதி KPY பாலாவிற்கு திருமணம்

விரைவில் காதல் திருமணம் ...உறுதியான தேதி KPY பாலாவிற்கு திருமணம்

சுஜிதா உருக்கம்

 மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா இவரது தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூரியகிரண், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி காலமானார்.

actress-sujitha-emotional-post-about-brother-surya

அவர் மறைந்து 4 நாட்கள் ஆகிய நிலையில், அவரை குறித்து நடிகை சுஜிதா உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரின் பதிவு வருமாறு,

சேட்டா❤️ நிம்மதியாக இருங்கள்?

என் அண்ணன் மட்டுமல்ல, என் தந்தையும் ஹீரோவும் நிறுத்துகிறார்கள். உங்கள் திறமை மற்றும் பேச்சுக்காக நான் உங்களை பாராட்டுகிறேன், பல வழிகளில், உங்கள் இருப்பு சென்றடைந்தது.

மறுபிறப்பு உண்மையாக இருந்தால், உங்கள் கனவுகள் மற்றும் சாதனைகள் அனைத்தும் புதிதாக தொடரட்டும்.