நடிகர் அஜித்தை பிளான் பண்ணி தூக்கிய சுகாசினி - வெளியான ஷாக் தகவல்!

Ajith Kumar Suhasini Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinothini Jul 29, 2023 03:30 PM GMT
Report

பிரபல நடிகரான அஜித்தை சுகாசினி படத்திலிருந்து தூக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமாவில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1995ம் ஆண்டு வெளியான ஆசை படம் தான் அஜித்துக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. வசந்த் இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

actress-suhasini-removed-ajith-from-a-movie

ஆசையை தொடர்ந்து வசந்த் இயக்கிய திரைப்படம் நேருக்கு நேர். இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சுகாசினி

இந்நிலையில், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படம் கடந்த 1997-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்தனர். ஆனால் இந்த கேரக்டரில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான்.

actress-suhasini-removed-ajith-from-a-movie

இந்த படத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு இயக்குனர் வசந்த் உடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுகாசினி மற்றும் மணிரத்தினம் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து இயக்குனர் வசந்திடம் அஜித்தை படத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளனர்.

முதலில் யோசித்த இயக்குனர் பிறகு ஒப்புக்கொண்டுள்ளார், இதனையடுத்து தான் நடிகர் சூர்யாவை தேர்வு செய்துள்ளனர்.