பிரபல நடிகரை காதலித்த நடிகை மீனா - கணவர் இறப்பிற்கு பின் வெளியான தகவல்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.
திருமணம்
90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை மீனா வித்யாசாகர் என்பவை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இதனிடையே உடல் நலக்குறைவால் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தார்.
பிரபலத்தை காதலித்த மீனா
கணவரை இழந்து தவிக்கும் மீனா தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஒரு தனியார் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை மீனா வித்யாசாகரை திருமணம் செய்வதற்கு முன்பே நடிகை ரித்திக் ரோஷனை திருமணம் செய்ய ஆசைபட்டுள்ளார்.
நடிகை மீனா தன் காதலை ரித்திக் ரோஷனுக்கு சொல்லி திருமணம் செய்யலாம் என்று நினைக்கும் போது தான் ரித்திக் ரோஷனுக்கு கல்யாணம் என்ற செய்தியைக் கேட்டு தன்னுடைய இதயமே நின்று விட்டதாக தன்னுடைய காதல் உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.
அவர் ரித்திக் ரோஷனை சந்தித்த போது எடுது்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.