கொஞ்ச நாள்'ல டைவர்ஸ் வாங்கிட்டேன்.....அது என் பொண்ணே இல்ல - சுகன்யா வேதனை!!

Sukanya
By Karthick May 26, 2024 07:37 AM GMT
Report

கடந்த சில காலமாக நடிகை சுகன்யா மகள் இவர் தான் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சுகன்யா

1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லி புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

Actress Sukanya

சினிமாவை பிறகு சின்னத்திரை தொடர்களில் நடிக்க துவங்கிய சுகன்யா, பிறகு 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் தொடரவில்லை. சில வருடங்களிலேயே சுகன்யா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார்.

Actress Sukanya clariifes

பின்னர் மீண்டும் தமிழ் திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுகன்யா இளம் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாக இவர் தான் சுகன்யா மகள் என பலரும் பேசி துவங்கினர்.

என் மகள் அல்ல...

அதற்கு பேட்டி ஒன்றில் சுகன்யா விளக்கம் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்தை தானும் பார்த்ததாக கூறி, அவள் என்னுடைய மகள் அல்ல, என் அக்காவின் மகள் என தெளிவுப்படுத்தினார். தன்னுடைய ட்விட்டரில் அப்புகைப்படத்தை பகிர்ந்ததாக சுட்டிக்காட்டி, அது இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்ட்டாகி விட்டது.

பம்பர சீன்.. எதுக்கு'னு கேட்டேன்...3 பேர வச்சி இயக்குனர் பண்ண வேல.!! சுகன்யா ஓபன் டாக்!!

பம்பர சீன்.. எதுக்கு'னு கேட்டேன்...3 பேர வச்சி இயக்குனர் பண்ண வேல.!! சுகன்யா ஓபன் டாக்!!

ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்ததும் ஒரு வருடத்திற்குள் தான் விவாகரத்திற்கு கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்ததாக கூறி, ஆனால் விவாகரத்து கிடைக்க தான் சில வருடங்களாகி விட்டதாக கூறினார்.

Actress Sukanya with family

வேண்டும் என்றே பற்றி ஏதாவது செய்திகளை பரப்ப வேண்டும் என்ற காரணத்தால், இப்படி செய்கிறார்கள் என விளக்கமளித்த சுகன்யா, அக்கா மகள் கூட இச்செய்திகளை பார்த்து சித்தியால் தானும் பிரபலமாகி விட்டதாக கிண்டலாக பேசுகிறார் என்றார்.