பம்பர சீன்.. எதுக்கு'னு கேட்டேன்...3 பேர வச்சி இயக்குனர் பண்ண வேல.!! சுகன்யா ஓபன் டாக்!!
நடிகை சுகன்யா பேட்டி ஒன்றில் சின்ன கவுண்டர் படத்தில் இடம்பெற்றிருந்த பம்பர சீன் குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.
சுகன்யா
1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லி புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். சினிமாவை பிறகு சின்னத்திரை
தொடர்களில் நடிக்க துவங்கிய சுகன்யா, பிறகு 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
அங்க போய் பம்பரம் விடுவாங்களா..?
பேட்டி ஒன்றில் சுகன்யா சின்ன கவுண்டர் படத்தில் இடம்பெற்றிருந்த பம்பர சீன் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், படத்தில் பம்பர காட்சிக்காக உதயக்குமார் தன்னிடம் பம்பரம் விட கற்றுக்கொள்ள கூறினார் என்று கூறி, பிறகு தான் தன்னுடைய வயிற்றில் பம்பரம் விடும் காட்சி ஒன்று இருப்பதாக இயக்குனர் தெரிவித்தார் என்றார்.
அப்போது தான் உடனே அந்த இடத்தில் நடக்குற இதெல்லாம் காரியமா? இது என கேட்டதாக சொன்ன சுகன்யா, எப்படியோ தன் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை அழகாக எடுத்துவிட்டார் என்றும் அக்காட்சியில் ஆபாசமாக எதுவும் தெரியவில்லை என கூறினார்.
அக்காட்சிக்காக ஒத்திகை நடந்தது என்ற சுகன்யா, தனக்கு மட்டும் 3 அசிஸ்டெண்ட்டுகள் அந்தக் காட்சியின் ஒத்திகையின் போது உடன் இருந்தார்கள் என குறிப்பிட்டு, முதலில் பயமாக இருந்தாலும், பிறகு ஒருவழியாக நடித்துவிட்டேன் எனக்கூறினார்.