சுகன்யாவின் ஒரே மகள் இவரா? பல வருஷத்திற்கு பின் உண்மை உடைத்த நடிகை!
நடிகை சுகன்யாவின் மகள் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
நடிகை சுகன்யா
1990 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லி புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன் போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக் கூட நீடிக்கவில்லை. அதன்பின் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார்.
தனது மகளை சினிமாவிலிருந்தும், மீடியாவிடமிருந்தும் தள்ளியே வைத்துள்ளார் என பல செய்திகள் பரவியது. மேலும், நடிகை சுகன்யாவின் மகள் இவர்தான் என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகன்யா, திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து கோரியதால் குழந்தைகள் எதுவும் இல்லை. புகைப்படத்தில் இருப்பது தனது அக்கா மகள் என்று தெரிவித்துள்ளார்.