எனக்கு 20 வயது அப்போவே அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க - உண்மை உடைத்த பிரபல நடிகை!
நடிகை ஒருவர் அவரது இளம்வயதிலேயே நடந்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை ரெஜினா
தமிழ் சினிமாவில் செலியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமாகினர். பின்னர் அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இவர் பெரிதாக வெளியில் தெரியவில்லை, பின்னர் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு தொடர்ந்து, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, தலைவியில் கெஸ்ட் ரோல் என படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார். அதில் அவர், "என் திரையுலக வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் அட்ஜெஸ்ட்மெண்ட் தொடர்பான அனுபவத்தை சந்தித்திருக்கிறேன். அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாமா என தொலைபேசியின் மூலம் ஒருவர் என்னிடம் கேட்டார்.

அதற்கான அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. சரி சம்பளத்தில்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாமா என என்னிடம் கேட்கிறார் போல என நினைத்துக்கொண்டேன். அப்போது எனக்கு வயது 20. அவரிடம் எனது மேனேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன்.
ஆனால் பின்னர்தான் தெரிந்தது அவர் வேறு வகையான அட்ஜெஸ்ட்மெண்ட்டை கேட்டார் என்று. என் வாழ்க்கையில் அந்த சம்பவத்துக்கு பிறகு தனிப்பட்ட முறையில் அதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததில்லை" என்று கூறியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil