இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா கடைசியாக கேட்ட 2 விஷயம் இதுதான் - உருக்கமான தகவல்!

Soundarya
By Sumathi Jun 30, 2023 06:12 AM GMT
Report

நடிகை சௌந்தர்யா இறப்பதற்கு முன் கேட்ட விஷயங்கள் குறித்து அவரது சகோதரரின் மனைவி பகிர்ந்துள்ளார்.

நடிகை சௌந்தர்யா 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை செளந்தர்யா. அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனேக படங்கள் வெற்றியையே பதி செய்தது.

இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா கடைசியாக கேட்ட 2 விஷயம் இதுதான் - உருக்கமான தகவல்! | Actress Soundarya Sister In Law Reveals Last Words

தெலுங்கில் பிரபலமாக இருந்த இவர், கன்னடம் ஹிந்தி படங்களிலும் நடித்திருந்தார். 2003ல் ரசு என்ற சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்துக்கொண்டார். 2004ல் பாஜகவில் இணைந்த இவர், எம்பி தேர்தலில் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஆந்திராவுக்கு சென்றபோது,

உருக்கமான பதிவு

​​பெங்களூரு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார். அதில் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சம்பவம் தென்னகத்தையே உலுக்கியது.

இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா கடைசியாக கேட்ட 2 விஷயம் இதுதான் - உருக்கமான தகவல்! | Actress Soundarya Sister In Law Reveals Last Words

இந்நிலையில், சௌந்தர்யா கடைசியாக விமானத்தில் செல்லும் முன் காட்டன் புடவையும், குங்குமமும் தருமாறு கேட்ட அவர் பின்னர் திரும்பி வரவே இல்லை என அவரின் சகோதரர் மனைவி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.