குஷ்பு மட்டும் வரலனா அந்த நடிகை தான் கண்டிப்பா - சுந்தர் சி வருத்தம்!

Sundar C Soundarya Trisha Kushboo
By Sumathi Apr 19, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சுந்தர் சி.

சுந்தர் சி

இவர் 2006-ம் ஆண்டு முதல் இயக்குநர் பணியிலிருந்து ‘தலை நகரம்’ படத்தின் மூலம் நடிகரானார். இதனையடுத்து, வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம், முரட்டுக் காளை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 1995ம் ஆண்டு ‘முறை மாமன்’ என்ற படத்தை சுந்தர் சி இயக்கினார்.

குஷ்பு மட்டும் வரலனா அந்த நடிகை தான் கண்டிப்பா - சுந்தர் சி வருத்தம்! | Sundar C Once Wish To Marry Soundarya

இப்படத்தில் ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் நடித்தபோது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

விருப்பம்

இந்நிலையில், சுந்தர்.சி கலந்து கொண்ட பேட்டி ஒன்றில், “நடிகை த்ரிஷாவுடன் பணியாற்ற வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். மேலோட்டமாக பார்த்தால், திரிஷா ஈடுபாடு இல்லமால் இருப்பது போல் தோன்றும். ரம்பாவிடம் சில குறைகள் இருந்தது, ஆனால் அவர் அதை கடின உழைப்பால் மாற்றி கொண்டார்.

குஷ்பு மட்டும் வரலனா அந்த நடிகை தான் கண்டிப்பா - சுந்தர் சி வருத்தம்! | Sundar C Once Wish To Marry Soundarya

நடிகை ஓவியா மிகவும் அமைதியானவர். நான் பார்த்து பழகிய ஓவியாவுக்கும் இப்போது இருக்கும் ஓவியாவுக்கு அதிக வேறுபாடுகள் இருக்கிறது. சௌந்தர்யா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. இதுவரை நான் எங்கும் சொன்னது இல்லை.

என் வாழ்க்கையில் குஷ்பூ வரவில்லை என்றால் நான் செளந்தர்யாவிடம் என் காதலை சொல்லிருப்பேன். காரணம் அவர் அப்படி ஒரு தங்கமான குணம் கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.