எனக்கு தனுஷுடன் நெருங்கிய பழக்கம்.. அந்த விஷயம் செல்வராகவனிடம் இல்லை - சோனியா வெளிப்படை!

Dhanush Selvaraghavan Tamil Actors Tamil Actress Tamil Directors
By Vinothini Sep 06, 2023 07:25 AM GMT
Report

நடிகை சோனியா அவரது முன்னாள் கணவர் செல்வராகவன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

செல்வராகவன்

திரைப்பட இயக்குனரான செல்வராகவன் ஆரம்ப காலத்தில் தந்தை கஸ்தூரிராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் எழுத்தாளராக பணியை துவங்கினார். பின் தன் தம்பியை கதாநாயகனாக காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி தன்னை ஓர் இயக்குனராக வெளிப்படுத்தினார்.

actress-soniya-says-about-dhanush-and-selvaragavan

இவர் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் 2006-ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார்.

சோனியா பேட்டி

இந்நிலையில், சோனியா அகர்வால் திருமணமான சில நாட்களிலேயே விவாகரத்து பெற்றார். ஆனால் 10 வருடங்கள் கழித்து சமீபத்தில் தான் இவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். தற்பொழுது தனுஷ் மற்றும் செல்வராகவன் பற்றி அவர் பேசியதாவது, "காதல் கொண்டேன் படத்தில் நடித்த போது, என் அம்மா தனுஷின் தோற்றத்தை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா? என அவரை ஆச்சர்யத்தோடு கேள்வி எழுப்பினார்.

actress-soniya-says-about-dhanush-and-selvaragavan

பின்னர் நான் கதைக்கு ஏற்றாப்போல் தான் இயக்குனர் ஹீரோவை தேர்வு செய்வார் என கூறி அவரை சமாதானம் செய்தேன். ஆனால் நிஜத்தில் செல்வராகவனை விட தனுஷ் தான் நல்லவர், படப்பிடிப்பின் போது காட்சிகள் சரியாக வரவில்லை என்றாலும், நாங்கள் சரியாக நடிக்கவில்லை என்றாலும் செல்வராகவன் மிகவும் மோசமாக எங்களை திட்டி அழவைத்து விடுவார்.

பிறகு தனுஷ் தான் மிகவும் அனுசரணையாக வந்து, அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என ஆறுதல் கூறுவார். எனவே பல நேரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுடன் தான் பழகி உள்ளேன்" என்று கூறியுள்ளார்.