பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா - பிரபல நடிகை சோனியா அகர்வால் திடீர் கைது

drug case Actresssoniaagarwal sonia agarwal
By Petchi Avudaiappan Aug 31, 2021 12:00 AM GMT
Report

 நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சமீபத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் தாமஸ் கால் என்ற நைஜீரியா நாட்டு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கல்லூரி மாணவர்கள், மென் பொறியாளர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது.

அதனடிப்படையில் 'டிஜே' வசன் சின்னப்பா, கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால், தொழிலதிபர் பரத் ஆகியோரது வீடுகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சோனியா வீட்டில் 40 கிராம் கஞ்சா கிடைத்ததாகவும், அவர் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதும், மற்றவர்களுக்கும் வாங்கி கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கன்னட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோர் சிக்கிய நிலையில், தற்போது மீண்டும் நடிகை ஒருவர் போதை பொருள் சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது ன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.