பிச்சை கூட எடுப்பேன்; வடிவேலு கூட இனி நடிக்க மாட்டேன் - பிரபல நடிகை காட்டம்
வடிவேலு கூட இனி நடிக்கவே மாட்டேன் என நடிகை சோனா தெரிவித்துள்ளார்.
நடிகை சோனா
தமிழில் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சோனா. மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலமொழிகளிலும் நடித்திருந்தார்.
வடிவேலு, விவேக் போன்ற பல நகைச்சுவை நடிகர்களோடும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சில சீரியல்களில் வலம் வந்தார். பின் சில வருடங்களாக சினிமா மற்றும் சீரியல் என எதிலும் தலை காட்டாமல் இருந்தார்.
வாய்ப்பு வேண்டாம்
தற்போது ஸ்மோக் என்ற வெப் சீரிஸை இயக்கி, தானே நடித்துள்ளார். இந்நிலையில் இதற்கான பிரமோஷன் பணிகளில் சோனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அளித்த பேட்டி ஒன்றில், வடிவேல் சார் பத்தி வேற யார்கிட்டயாவது என்ன நினைக்கிறீங்க என்று கேட்டுப்பாருங்க. கழுவி கழுவி ஊத்துவாங்க. அதையே நானும் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்.
குசேலன் படத்திற்கு பிறகு எனக்கு வடிவேல் சார் கூட 16 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் எதற்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
எனக்கு கோடி ரூபாய் கொடுத்தா கூட அந்த வாய்ப்பு வேண்டாம். பிச்சை எடுத்து கூட சாப்பிடுவேனே தவிர அவர் படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது கவனம் பெற்று வருகிறது.