ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. ஆனால் break up - மனமுடைந்து பேசிய சிவாங்கி!
காதல் தோல்வி குறித்து சிவாங்கி மனம் திறந்துள்ளார்.
சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களில் கோமாளியாக வந்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்தார்.
தொடர்ந்து ஆல்பம் பாடல்கள், இசைக்கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார். தற்போது சிவா நடித்த காசேதான் கடவுளடா மற்றும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
காதல் தோல்வி
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பிஸியாக இருக்கும் நீங்கள் இதற்குமுன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களா என தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு, ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், ஆனால் இப்போது எனக்கு break up ஆகிவிட்டது.
அது மிகவும் கடினமாக இருந்தது. அந்த Heart break எனக்கு வலிமையை கொடுத்துள்ளது என மனமுடைந்து பதிலளித்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.