பாலியல் தொழிலாளி கேரக்டரில் நல்ல அனுபவம்;மனநிறைவு - வெளிப்படையாக பேசிய சோபிதா!

Bollywood Sobhita Dhulipala
By Sumathi Apr 15, 2024 02:30 PM GMT
Report

தான் நடித்த அனுபவம் குறித்து நடிகை சோபிதா மனம் திறந்துள்ளார்.

நடிகை சோபிதா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சோபிதா. 2013 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் அழகி போட்டியில் கலந்துக்கொண்டு பட்டம் வென்றார்.

actress sobhita

தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார். தமிழில் பொன்னியின் செல்வன் படம் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்துவிட்டார்.

அதைத் தவிர தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் சோபிதா ஹாலிவுட்டிலும் கால் எடுத்து வைத்துள்ளார். அதன்படி தேவ் படேல் இயக்கத்தில் வெளியான மங்கி மேன் திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.

யார் யாரை காதலிச்சாலும் எனக்கு கவலை இல்லை - மாஜி கணவர் குறித்து பொங்கிய சமந்தா!

யார் யாரை காதலிச்சாலும் எனக்கு கவலை இல்லை - மாஜி கணவர் குறித்து பொங்கிய சமந்தா!

மங்கி மேன்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சோபிதா, மங்கி மேன் திரைப்படத்தில் சீதா கதாப்பத்திரத்தில் நடித்தது நல்ல அனுபத்தை தந்தது. திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. பாலியல் தொழிலாளியாக நடித்திருந்த தனது கதாப்பாத்திரத்தை அமெரிக்க ரசிகர்கள் விரும்பினர்.

பாலியல் தொழிலாளி கேரக்டரில் நல்ல அனுபவம்;மனநிறைவு - வெளிப்படையாக பேசிய சோபிதா! | Actress Sobhita About Role Sex Worker In Cinema

இந்திய ரசிகர்களும் விரும்புவார்கள் என நம்புகிறேன். பாலியல் தொழிலாளியாக நடித்தது தனக்கு மனநிறைவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.