சமந்தா முன்னாள் கணவரின் காதலிக்கு கல்யாணம்? குழப்பத்தில் ரசிகர்கள்!
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் காதலி நடிகை சோபிதா துலிபாலா திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சோபிதா துலிபாலா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீப காலமாக, இவரின் மார்க்கெட் கொடி கட்டி பறக்கிறது. தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்தவர்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை 7 வருடம் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதன்பின், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது அனைவரும் அறிந்ததே..
திருமணம்?
அதனைத் தொடர்ந்து, நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். அடிக்கடி இருவரும் சந்தித்து கொள்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை இதுகுறித்து இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சோபிதா துபாயில் நடந்த திருமண புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் அதில் மாப்பிள்ளை நாக சைதன்யா இல்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இறுதியில்தான் தெரிந்தது சோபிதா விளம்பரத்திற்காக நடித்த திருமண புகைப்படங்கள் அவை என்பது...