ரொம்ப பாசமா இருந்தோம்..அவருக்கு அப்புறம்...தோணல !! அதான் திருமணம் செஞ்சிக்கல - புதுவசந்தம் சித்தாரா..!
புதுவசந்தம் படத்தில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தார் சித்தாரா.
சித்தாரா
விக்ரமன் இயக்கிய இந்த படத்தில் முரளி, ஆனந்த் பாபு போன்றோரும் நடிக்க படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு முன்னதாகவே இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் "புது புது அர்த்தங்கள்" படத்தில் அறிமுகமாகினார் சித்தாரா.
அப்படத்தை தொடர்ந்து புரியாத புதிர், அர்ச்சனா IAS, கன்னடத்தில் விஷ்ணுவர்தனுடன் ஹாலுண்ட டவரரு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள அவர், சிறிது காலம் கழித்து துணை காதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
மிக விரைவில், நடிகர் வடிவேலுவுக்கு ஒரு படத்தில் சித்தாரா ஜோடியாக நடிப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளியானது.
திருமணம்
இதனால் தான்.. 90-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக வளம் வந்த சித்தாரா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது, தனது தந்தை பரமேஸ்வரன் நாயர் என்பவருடன் மிகவும் பாசத்துடன் இருந்த சித்தாரா, தந்தையின் மறைவிற்கு பிரிவு பிறகு திருமணம் செய்து கொள்ள ஆர்வம் வராத காரணத்தால், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
You May Like This Video