அந்த விஷயத்துக்கு நான் அடிமை; ஆனா அந்த பொருள் யூஸ் பண்ணதே இல்ல - ஸ்ருதி ஹாசன் ஒபன் டாக்!
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரித்விராஜ் ஆகியோர் நடித்த 'சலார்' திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி பழமொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் அவர், 'The Eye’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருதி ஹாசன், தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
மதுவுக்கு அடிமை
இதுகுறித்து பேசிய அவர் "என் வாழ்நாளில் 8 ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாட்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் குடிப்பதை விரும்புவேன்.
ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாட்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்" என்று ஸ்ருதி ஹாசன், தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil
