உண்மை முகம் இப்போதான் தெரிகிறது..காதலரை பிரேக்-அப் செய்தாரா ஸ்ருதிஹாசன்?
நடிகை ஸ்ருதிஹாசன் சமூகவலைதளத்தில் அவரது காதலரின் புகைப்படங்களையும் நீக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியது.
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்ற ஆர்ட்டிஸ்டை வெகு நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது ஜோடியாக இருவரும் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன்.

இருப்பினும் அவரது ரசிகர்கள் பலர் இருவருக்கும் திருமன்னம் எப்போது என்ற கேள்வி எழுந்தால் அதற்கு பதிலளிக்காமல் தவிர்த்து வந்தார் ஸ்ருதி. இந்த நிலையில், அவரது வலைதளப் பக்கத்தில் திடீரென சாந்தனுவை அன்ஃபாலோ செய்துள்ளார் ஸ்ருதி.
பிரேக்-அப்
மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனை நோட் செய்த ரசிகர்கள் இருவருக்கும் பிரேக்கப்பா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே சமயத்தில், சாந்தனுவும் ஸ்ருதியை சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார். ‘சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது’ எனப் புதிரான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி.
இதையடுத்து, சாந்தனு- ஸ்ருதி ஆகிய இருவரும் டந்த ஒரு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை இதற்கு காரணம் ‘’இனிமேல்’ வீடியோ பாடலில் லோகேஷ் கனகராஜூடன் நெருக்கம் காட்டியது இதனால் தானா?” என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil