Tuesday, May 20, 2025

அப்போவே தெரியும்.. எங்க உறவு கூட அப்படிதான் - ஸ்ருதி குறித்து பப்லு வேதனை!

Serials
By Sumathi 2 years ago
Report

நடிகை ஸ்ருதி கணவர் மறைவு குறித்து பப்லு பேசியுள்ளார்.

நடிகை ஸ்ருதி 

நாதஸ்வரம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்திருந்த நடிகை சுருதி சண்முகப்பிரியா. கடந்த வருடம் தான் திருமணம் செய்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவருடைய கணவர் அரவிந்த் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அப்போவே தெரியும்.. எங்க உறவு கூட அப்படிதான் - ஸ்ருதி குறித்து பப்லு வேதனை! | Actress Shruthi Husband Death Reason About Bablu

ஸ்ருதியோடு வாணி ராணி சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் பப்லு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், ஸ்ருதி என்னுடைய மருமகள்தான். அது வாணி ராணி என்று சீரியலில் பல வருடங்களாக என்னுடைய மருமகளாக நடித்ததால் அப்படியே தான் எங்களுடைய உறவு இருந்தது.

 பப்லு வேதனை

இந்த சீரியல் முடிந்து பல வருடங்கள் ஆனாலும் நாங்கள் இப்பவும் நன்றாகத் தான் பழகிக் கொண்டிருக்கிறோம். ஸ்ருதி ரொம்ப நல்ல பொண்ணு. அதே போல அவர் கல்யாணம் செய்த அரவிந்தும் நல்ல பையன். அழகாக இருப்பார். உடம்பை நன்றாகவே பராமரிப்பு செய்து வந்தார்.

அப்போவே தெரியும்.. எங்க உறவு கூட அப்படிதான் - ஸ்ருதி குறித்து பப்லு வேதனை! | Actress Shruthi Husband Death Reason About Bablu

நல்ல குணமும் உண்டு. எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது. அவருடைய குடும்பமும் நல்ல குடும்பம். ஸ்ருதி சந்தோசமாகத்தான் வாழ்ந்து கொண்டு இருந்தாள். நாலு நாளைக்கு முன்னாடி கூட நான் ஸ்ருதியிடம் பேசினேன்.

அப்போது அரவிந்துக்கு உடல்நிலை சரியில்லை என்றாள். என்னவென்று கேட்டதற்கு ஹார்ட்டை சுற்றி ஏதோ லிக்யூட் மாதிரி இருக்குது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க என்று சொன்னதாக தெரிவித்துள்ளார்.