எனக்கு காதல் திருமணம் தான்.. ஆனா இது மட்டும் நடந்ததில்லை - நடிகை ஓபன் டாக்!
நடிகை தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஷிவதா நாயர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் ஷிவதா நாயர். இவர் தமிழில் நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் ஜீரோ, தீரா காதல், அதே கண்கள் போன்ற பல படங்களில், பல நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.

மேலும், இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீராக்காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்யின் மனைவியாக நடித்திருப்பார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தனது கணவர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், "நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். அவர் என்னுடன் கல்லூரியில் படித்தார். அப்போதிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்றாலும் கூட அடிக்கடி சேர்ந்து கொண்டு வெளியில் சுற்றுவது மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசுவது இரவு நேரங்களில் தூங்காமல் போனில் பேசிக் கொண்டிருப்பது இது போன்ற எந்த ஒரு விஷயத்தையும் நாங்கள் செய்தது கிடையாது. இருவரும் காதலிக்கிறோம். அவர் அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பார், நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன்.
இப்படியேதான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டோம் திருமணத்திற்கு பிறகும் அவர் எப்படி திருமணத்திற்கு முன்பு இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் என்னுடன் அன்பாக இருக்கிறார். என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு துணை நிற்கிறார்" என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி IBC Tamil
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan