அந்த மாதிரி ஆசையெல்லாம் இருக்கு.. ஆனா கல்யாணம் ஆகல, வெயிட் பன்றேன் - ஒப்பனா பேசிய நடிகை நக்மா!
நடிகை நக்மா தனது திருமண ஆசை குறித்து ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா, இவரது சகோதரி தான் நடிகை நக்மா. 90ஸ் காலகட்டத்தில் இவரும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநல் ஷங்கர் இயக்கிய காதலன் என்ற படத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் முதல் படத்திலேயே ஹிட் கொடுத்து பிரபலமானார். தொடர்ந்து, பாட்ஷா, பிஸ்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு, இவர் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். பின்னர், இவருக்கு மெதுவாக பட வாய்ப்பு குறைய தொடங்கியது, அதன்பிறகு அரசியலில் குதித்தார், தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், 48 வயதான நடிகை நக்மா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்பொழுது பேட்டியில் அவர், "எனக்கு திருமணம் செய்யவேக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது.
அப்படி ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருந்தாலும் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனது வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.