விஜய்சேதுபதியுடன் ஒருநாள் மட்டும் கூட போதும்... ஆசையை பகிர்ந்த பிரபல நடிகை!
நடிகை ஷில்பா மஞ்சுநாத், விஜய்சேதுபதி குறித்து பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
ஷில்பா மஞ்சுநாத்
நடிகை ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். கன்னடா, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் தென்னிந்திய முன்னனி நடிகைகளுள் ஒருவராக புகழ் பெற்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பளம் வேண்டாம்
இதன்மூலம் தனக்கான ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டியுடன் வெப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், இவருடன் நடித்தால் மட்டும் போதும்,
எனக்கு சம்பளமே வேண்டாம் என நினைக்கும் நபர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய்சேதுபதியுடன் ஒரு நாள் மட்டும் நடித்தால் கூட போதும் சம்பளம் வேண்டாம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.