கல்யாணமாகி 3 ஆண்டுகள் தான்.. கணவரை பிரியும் விஜய்சேதுபதி பட நாயகி
நடிகை நிஹாரிகா தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிஹாரிகா-சைதன்யா
சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் தான் நிஹாரிகா. தமிழில் விஜய் சேதுபதி நடித்திருந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில், கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து, தனது காதலரான சைதன்யா ஜொன்னலக்டாவை டிசம்பர் 2020-ல் உதய்பூரில் திருமணம் செய்தார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர், குண்டூர் ஐ.ஜி எம்.பிரபாகர ராவின் மகன். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பிஸினெஸ் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.
விவாகரத்து
இந்நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக இல்லை என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதன்படி, இன்ஸ்டகிராமில் ஒருவரையொருவர் அன் ஃபாலோ செய்ததால், அவர்கள் பிரிந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan