பிரேக் அப்பால் தினமும் அழுகை, வெறி; மன அழுத்தம் - புலம்பிய நடிகை ஷெரின்!
காதல் தோல்வியால் அழுது புலம்பியதாக நடிகை ஷெரின் மனம் திறந்துள்ளார்.
நடிகை ஷெரின்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். தொடர்ந்து, விசில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். மேலும், குக் வித் கோமாளி சீசன் 4ல் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் எனது நீண்ட நாள் காதலரை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்தேன், தினமும் அழுதுக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தேன்.
மன அழுத்தம்
இந்த மன அழுத்தத்தில் இருந்த எப்படியாவது வெளியில் வரவேண்டும் என்று நினைத்தேன் அப்போதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அறிமுகம் இல்லாத நபர்கள், போன் இல்லை, நண்பர்கள் இல்லை. ஆனால், காதல் தோல்வியைவிட அந்த வலி எனக்கு பெரியதாக தெரியவில்லை.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது.
அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் நான் இன்னும் பிரபலமாகிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.