1 மாதத்தில் கல்யாணம்; 37 வயதில் அடம்பிடிக்கும் ஷெரின் - எதற்கு தெரியுமா?
நடிகை ஷெரின் தனது திருமணம் குறித்த தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
ஷெரின்
செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் என்ற படங்கள் நடித்தார். இடையில் பல வருடங்கள் காணாமல் போன ஷெரின் விஜய்யின் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார். அதன் மூலமே பிரபலமானார்.
அதன்பின், தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், ஒரு மாதத்தில் ஷெரினுக்கு திருமணம் என்று செய்திகள் பரவிய நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
திருமணம்?
’சமீபத்தில் ரசிகர் ஒருவர் என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்ட போது ஒரு மாதத்தில் திருமணம் என்று காமெடியாக கூறினேன். இதை இவ்வளவு பெரிய செய்தி ஆக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனவே எனக்கு ஒரு மாதத்தில் திருமணம் என்று சொன்னது நான் முழுக்க முழுக்க காமெடி தான், எனக்கு ஒரு மாதத்தில் திருமணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.