3 வயதில் பிரிந்தவர் - இறந்து ஒரு வாரம் ஆயிடுச்சு...அப்பாவின் மறைவால் உடைந்த ஷெரின்
தனது தந்தையின் மறைவு குறித்து உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஷெரின்.
ஷெரின்
செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் என்ற படங்கள் நடித்தார்.

இடையில் பல வருடங்கள் காணாமல் போன ஷெரின் விஜய்யின் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார். அதன் மூலமே பிரபலமானார்.

அதன்பின், தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவ்வப்போது படங்களில் தற்போது அடித்து வருபவர், சின்னத்திரையில் பிரபலமாகி இருக்கிறார்.
அப்பா மறைவு
அதே போல, சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவே இருக்கிறார் ஷெரின். இவருக்கு Followers'உம் அதிகம். அண்மையில் தனது தந்தையின் மறைவு குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷெரின்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது தந்தையின் புகைப்படத்தை நான் உங்களை நேசித்தேன்; என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக நான் ஏங்கினேன். நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து விட்டீர்கள் என்று இன்று தான் நான் அறிந்தேன். அது என் இதயத்தை இன்னும் உடைக்கிறது   
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    