அவரால் சீரழிந்த வாழ்க்கை; இப்போ 48 வயதில் கர்ப்பம் - நடிகை ஷர்மிலி ஷாக் தகவல்
நடிகை ஷர்மிலி 48 வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஷர்மிலி
ஆவாரம்பூ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. கவுண்டமணியுடன் 27 படங்களில் நடித்துள்ள ஷர்மிலி, வடிவேலு, விவேக், வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தனது 40 வயதில் ஐடி துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நீதிபதிக்கு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஷர்மிலி,
கர்ப்பம்
தன்னையும் - கவுண்டமணியையும் பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் எழுந்ததால், கவுண்டமணியுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்றேன். அதன்பின், டிக்க புக் ஆகி இருந்த படங்களில் இருந்து தூக்கியது மட்டும் இன்றி, மற்ற படங்களின் வாய்ப்புகளும் கிடைக்காத அளவுக்கு செய்து விட்டார்.
இதனால் தன்னுடைய திரையுலக வாழ்க்கையே நாசமானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், த்ற்போது 48 வயதில் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.