நீண்ட நாள் ஆண் நன்பரின் பகீர் செயலால் நடிகை ஷம்மு வேதனை - என்ன செய்தார்?
தொலைந்துபோன போன் மீண்டும் பார்சலில் வந்ததாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரீல்ஸ் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வரும், இவர் ஈஸ்டர் அன்று ம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார். பின்னர் அதை முடித்துவிட்டு சூளைமேட்டில் தன் நண்பர் வீட்டில் அன்றிரவு தங்கியுள்ளார்.
வேதனை
மறுநாள் ரூ.2 லட்சம் மதிப்பில், தான் புதிதாக வாங்கிய ஐ-போனை காணவில்லை என புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அவரது வீட்டிற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில், தான் காணாமல் போனதாக புகார் அளித்த ஐபோன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து தான் சந்தேகப்பட்ட நபர் தான், தனது போனை திருடியதாகவும் எட்டு வருட நட்பு அர்த்தமற்றுப் போனதாகவும், தன் சமூகவலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.