தெரியாம தூங்கிட்டேன், தலையில் ரத்தம் வர அளவுக்கு அடிச்சான் - நடிகை கண்ணீர் மல்க பேட்டி!
பிரபல சீரியல் நடிகை தனது கணவர் செய்த டார்ச்சர் குறித்து கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
சீரியல் நடிகை
முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் சூப்பர் மாம் போன்ற சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தது குறித்த போட்டோஷூட் பிரபலமானது.
இவரது விவாகரத்து செய்தது குறித்த காரணத்தை ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் முதலாவதாக திருமணம் செய்துகொண்ட நபருடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறியுள்ளார்.
கண்ணீருடன் பேட்டி
இந்நிலையில், இவர் தனது பெற்றோருடன் வசித்துக் கொண்டு இருந்த போதுதான் ரியாசுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார். ஆரம்பத்தில் அன்பாக பார்த்துக்கொண்ட அவர் நாட்கள் செல்ல செல்ல அடிக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் முதல் வாழ்க்கை சரியில்லாததால் இரண்டாவதும் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டுள்ளார்.
குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து குழந்தைக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டுள்ளார். அப்பொழுது கூட இவரை விடாமல் சரக்கு அடிக்கவைத்து அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். மேலும், "ஒரு நாள் சரக்கு அடிச்சிட்டு தூக்கிட்டேன் அப்போது என் மேல தண்ணியை ஊத்தி எழுப்பி, நீ மட்டும் நல்லா தூக்குறியானு கேட்டு அடிச்சான். அடிச்ச அடில என் தலையில் இருந்து ரத்தம் வந்துச்சு. ரத்தம் வந்தாலும் விடாம, ரத்தம் வர அளவுக்கு என்ன அடிக்க வெச்சிடியே டீனு சொல்லிட்டு மீண்டும் பயங்கரமா அடிப்பான். தினம் தினம் அடிவாங்கி நான் கஷ்டப்பட்டேன், அதனால் தான் விவகாரத்தை போட்டோஷூட் நடத்தி கொண்டாடினேன். எனது செயலை சிலர் விமர்சித்திருந்தாலும், சிலர் நான் எதிர்க்கொண்ட போராட்டங்களையும் சவால்களையும் முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்" என்று தன் வேதனையை பகிர்ந்துள்ளார்.

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த கர்ப்பிணி அரச அதிகாரி: கணவர் ஐந்து மாதங்களின் பின் அதிரடி கைது IBC Tamil
