வெறும் 5 படம் தான்.. 23 வருஷமா நடிக்கல; ஆனால் சொத்து ரூ.300 கோடி - யார் இந்த நடிகை?
நடிகை ஷாலினியின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலினி
'என்டே மாமாட்டுக்குட்டியம்மக்கு' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினி. தொடர்ந்து பல மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கினார்.
அப்போது, ஷாலினியை செல்லமாக 'பேபி ஷாலினி' என அழைத்து வந்தனர். பின்னர் 1997-ம் ஆண்டு வெளியான 'அணியத்திப்ராவு' என்கிற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
மேலும், தமிழில் 'காதலுக்கு மரியாதை' என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.
ரூ.300 கோடி
ஷாலினி கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் அஜித்தை காதலித்து திருமண செய்து கொண்டார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
ஷாலினி சினிமாவை விட்டு விலகி 23 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் மவுசு குறையாத நடிகையாக வலம் வருகிறார். மேலும், தமிழில் 5 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த காலகட்டத்திலேயே ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கி வந்தாராம்.
அஜித்-ஷாலினி ஜோடியின் சொத்து மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.