நள்ளிரவில் பரபரப்பு - நடிகை ஷகீலா மீது மகள் கொடூர தாக்குதல்..!
நடிகை ஷகீலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதல்
பிரபல நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் அடித்துத் தாக்கியதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.ஷகிலாவின் அண்ணன் மகளான ஷீத்தலை 6 மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே ஷகிலா தனது வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை மாலை ஷகீலா வீட்டில் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில், வளர்ப்பு மகளான ஷீத்தல் ஷகிலாவை தாக்கிவிட்டு தனது சொந்த தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். தன்னை தாக்கிய சம்பவத்தை குறித்து ஷகிலா வழக்கறிஞர் சவுந்தர்யாவிடம் தெரிவிக்க, ஷீத்தலிடம் இரு தரப்பினரும் சமாதனமாக போகலாம் என்று வழக்கறிஞர் சவுந்தர்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்காக ஷகிலாவின் வீட்டிற்கு ஷீத்தல், அவரது தாயார், அவரது சகோதரி ஆகியோர் வந்துள்ளனர்.
கொலை மிரட்டல்
பேச்சுவார்த்தையின் போது, திடீரென ஷீத்தல் வழக்கறிஞர் சவுந்தர்யா மீது தாக்கியதன் காரணமாக படுகாயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா, தனியார் மருத்துவமனையில் முதலுதவி கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அப்போது, ஷகிலாவிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளையும் விசாரணைக்குக் கைப்பற்றியுள்ளனர்.
ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல், ஷீத்தல் தாய், சகோதரி ஆகியோர் இணைந்து ஷகிலா மற்றும் அவரது வழக்கறிஞரைத் தாக்கியதாகப் புகார் தரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.