அவர் அப்படி பண்ணிருக்கக் கூடாது.. ஆண்கள் இதுக்குதான் லாய்க்கா? - வெளுத்துவங்கிய ஷகீலா!
நடிகை ஷகீலா பிக் பாஸ் குறித்து பேசியுள்ளார்.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டனர். இது குறித்து பலரும் நடிகர் கமல்ஹாசன் பேசியது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இது குறித்து நடிகை ஷகீலா பேசியுள்ளார். அதில் அவர், "பிரதீப் ஆண்டனியை தனக்கு சுத்தமாக பிடிக்காது என்றும் அவர் மோசமாக சிரிக்க ஆரம்பித்தாலே டிவியை ஆஃப் செய்து விட்டு நகர்ந்து விடுவேன். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எல்லாமே யோக்கியமானவர்கள் கிடையாது".
நடிகை பேட்டி
இந்நிலையில், நடிகை ஷகீலா பேட்டியில், "பிரதீப்பை ஒரு அப்படி சித்தரித்து வெளியே அனுப்பியது முற்றிலும் தவறு. கமல் சார் தீர விசாரித்து இருக்கணும், பிரதீப் ஆண்டனி பேச டைம் கொடுத்திருக்கணும். பிக் பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனி அத்துமீறி நடந்திருந்தால் பெண்கள் அப்போதே தங்கள் எதிர்ப்பை ஏன் தெரிவிக்கவில்லை.
ஆனால், கமல் சார் எதையும் கேட்காமல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது தப்பு தான். ஏற்கனவே அப்செட் ஆக உள்ள பிரதீப் ஆண்டனி இந்த காரணத்தால் வெளியே வந்ததும் தற்கொலை செய்துக் கொண்டால் அவன் உயிரை யாராவது திருப்பிக் கொடுக்க முடியுமா?.
நான் கமல் சாரோட தீவிர ரசிகை. அவர் மீதிருந்த மரியாதை இந்த ஒரு விஷயத்தால் குறைந்துக் கொண்டே போகிறது. ஆனால், முழுக்க கமல் சார் மீது தவறில்லை. அவர் ஒரு ஹோஸ்ட் மட்டுமே.
பிக் பாஸ் இயக்குநர், அந்த டீம் சொல்வதை மட்டும் தான் இவர் செய்ய முடியும். ஆனால், அதில், கடைசியில் தனது அரசியல் ஆதாயத்துக்காக அவர் பேசியது தான் தற்போது அவரை அனைவருமே திட்ட காரணம்" என்று கூறியுள்ளார்.