அவனுக்கு 14 வயசு.. எனக்கு புடிச்சது; காதலான்னு சொல்ல தெரியல - நடிகை ஷகிலா பகீர்!
நடிகை ஷகிலா
மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. 1990களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் ஹிட் அடித்தது.

பின்னர் ஆபாசப் படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஷகிலா, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து கடந்தாண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
முதல் காதல்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷகிலா, தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "எனக்கு ஒரு 11 வயசுல முதல் காதல் ஆரம்பிச்சது.

எங்க வீட்டுக்கு பின்னால சுரேஷ் ரெட்டி'னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு ஒரு 14 வயசு இருக்கும். அவன் எனக்கு தினமும் பாதாம் பால், சமோசா, லட்டு வாங்கி கொடுப்பான்.
அதனால் எனக்கு அவன புடிச்சது. அவனுக்கும் என்னை புடிச்சது. அதான் என்னோட முதல் காதல். ஆனால் அந்த வயசுல அது காதலா'னு சொல்ல தெரியல. ஐ லவ் யு.. அப்படினு ஒரு வார்த்தையே தெரியாது அப்போ. நாங்க லவ்வே சொல்லிக்கல" என்று பேசியுள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil