எல்லாரும் தான் பண்றாங்க.. 2 தடவைக்கே எனக்கு அப்படியாச்சு - நடிகை ஷாலின் சோயா பகீர்!
கண்ணகி திரைப்படத்தின் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை ஷாலின் சோயா பேசியுள்ளார்.
ஷாலின் சோயா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கேரளாவை சேர்ந்த நடிகையான ஷாலின் சோயாவும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இவர் தமிழில் சமீபத்தில் வெளியான கண்ணகி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஷாலின் சோயா"இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக நான் தம் அடிச்சேன்.
கீழ விழுந்துட்டேன்
ஆனால் என்னோட நிஜ வாழ்க்கையில் நான் அடிக்க மாட்டேன். இதுக்காக தான் தம் அடிக்க ஆரம்பிச்சேன். இந்த படத்தில் உங்க கேரக்டர் ஒரு செயின் ஸ்மோக்கர் அப்படீன்னு இயக்குனர் சொன்னாரு. தம் அடிப்பீங்க, சரக்கு அடிக்கீங்கன்னு சொன்னாரு.
சரி இதெல்லாம் ஈஸியா பண்ணிரலாம்னு நெனச்சேன். அங்க போயி சிகரெட்டை வாங்கி ஒரு 2 இழுப்பு இழுத்தேன்.. தலைசுத்தி அப்படியே கீழ விழுந்துட்டேன். நான் நிறைய பேர் சிகரெட் அடிக்கிறத பார்த்திருக்கேன். இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாதுன்னு நெனச்சு பண்ணேன் இப்படி ஆகியிருச்சு" என்று பேசியுள்ளார்.