என் புருஷன் எனக்கு மட்டும் தான்..எதிர்பார்த்தது தப்பா - பார்த்திபன் குறித்து சீதா!

Parthiban Tamil Cinema Divorce
By Sumathi Dec 19, 2022 04:30 PM GMT
Report

 நடிகர் பார்த்திபனுடன் விவாகரத்து குறித்து அவரது மனைவி சீதா மனம் திறந்துள்ளார்.

 பார்த்திபன்-சீதா

தமிழ் திரையுலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். 1980 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை சீதா.

என் புருஷன் எனக்கு மட்டும் தான்..எதிர்பார்த்தது தப்பா - பார்த்திபன் குறித்து சீதா! | Actress Seetha Opened Up Divorce From Parthiban

இவர் ஆண் பாவம்,குரு சிசியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து நடிகர் பார்த்திபனுடன் பல படங்களில் நடித்து வந்தார்.1990 ஆம் ஆண்டு நடிகை சீதா வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

உருக்கம்

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில், நடிகை சீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் "ஒரு படத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என ஒரு பாடல் வரும்.

அந்தப் பாடலைப் போல நான் என்னுடைய வாழ்க்கையை எதிர்பார்த்தேன். எல்லா பெண்களும் போல நானும் அப்படி எதிர்பார்த்தான். அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பில் என்ன தவறு இருக்கிறது. இப்படிப்பட்ட மன வருத்தத்தால்தான் நாங்கள் பிரிந்தோம்" என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.