என் கனவு நிஜமாகிவிட்டது.. நடிகர் விஷாலின் மனைவியானேன் - ஆனந்தத்தில் அபிநயா!

Vinothini
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஷால் குறித்து நடிகை அபிநயா மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அபிநயா பேட்டி
நடிகை அபிநயா தற்பொழுது விஷாலுடன் "மார்க் ஆண்டனி" என்ற படத்தில் விஷாலின் மனைவியாக நடித்துள்ளார். இதில் பணியாற்றிய அனுபவம் குறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் விஷாலின் தீவிர ரசிகை என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுவதும், அவரை சந்திப்பதும் தனது கனவு என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்தக் கனவு நனவாகியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். மேலும், இவர் விஷாலின் முதல் படமான செல்லமே பார்த்துவிட்டு விஷாலின் ரசிகையாக மாறியதாகவும், அவரை வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டதாகவும் கூறினார்.
காதல் சர்ச்சை
இந்நிலையில், இவர் "பூஜை" படத்தில் நடித்தாலும், அவரைச் சந்திக்க முடியவில்லை என்றார். "தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் அவரது மனைவியாக நடித்துள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விஷாலை முதல்முறையாகச் சந்தித்தேன். என் கனவு நனவான நாள் அது. மிக்க மகிழ்ச்சி.
விஷாலுக்கு கோபம் அதிகம் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவரைச் சந்தித்த பிறகு தான் அவர் எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்தேன் என்று கூறினார். பின்னர், "நானும் விஷாலும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற செய்தி பல நாட்களாகக் கேள்விப்பட்டு வருகிறேன். அதில் உண்மை இல்லை" என்றும் தெளிவுபடுத்தினார்.
You May Like This Video