நடிகை சரோஜா தேவி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!
நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் காலமானார்.
சரோஜா தேவி மறைவு
கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் சரோஜா தேவி. தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமானார்.
மேலும், உச்சநட்சத்திரமாக இருந்த நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் நடித்துள்ளார்.
திரையுலகினர் இரங்கல்
இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 200 படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்தார். இந்நிலையில் பெங்களூருவில் உடல்நலக்குறைவால் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார்.
அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.