சிறு வயதிலேயே நடிகர் அஜித்திடம் தன் காதலை சொன்ன நடிகை - வெளிப்படை பேட்டி!

Ajith Kumar Tamil Cinema Tamil Actress
By Vinothini Oct 04, 2023 09:00 AM GMT
Report

நடிகர் அஜித் குறித்து நடிகை வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் மற்றும் தேவயானி நடித்த நீ வருவாய் என என்ற படத்தில் குலந்தனை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சரண்யா நாக். இவர் காதல் திரைப்படத்தில் சந்தியாவுக்கு பள்ளித் தோழியாகவும் நடித்திருப்பார்.

actress-saranya-nagh-about-ajith

பின்னர், பேராண்மை படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இனைந்து அவரை காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நா செத்துட்டேன்னு சொல்லிட்டாங்க.. உங்க தேவைக்காக இப்படியா பண்ணுவீங்க? - கடுப்பான நடிகை!

நா செத்துட்டேன்னு சொல்லிட்டாங்க.. உங்க தேவைக்காக இப்படியா பண்ணுவீங்க? - கடுப்பான நடிகை!

நடிகை பேட்டி

இந்நிலையில், நீ வருவாய் என படத்தில் தேவயாணிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு டூயட் பாடல் காட்சியில் செட்டில் இருந்து அஜித்தை பார்த்துக்கொண்டே இருந்ததாக கூறினார். "ஷூட் பிரேக் அப்போ அஜித்திடம் ஓடி சென்று உங்க கிட்ட ஒரு புகைப்படம் எடுக்கணும் என்று கேட்டேன்.

actress-saranya-nagh-about-ajith

நீ அண்ணானும் கூப்பிடமாட்ற, சார்னும் கூப்பிடமாற்ற புகைப்படம் எடுக்கணும்னு சொன்னா? அப்போ நான் வெக்கப்பட்டு இல்ல புகைப்படம் எடுக்கணும்னு சொன்னேன். அப்போ கேமரா மேனை கூப்பிட்டு புகைப்படம் எடுத்தோம்.

அப்போ நான் பாத்துட்டே இருந்தேன் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கனு சொன்னேன். உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்டேன், சிரிச்சாரு. சரி நான் சீக்கிரமா வந்துடுறேன் என்று சொல்லிட்டு ஓடிட்டேன்" என்று கூறியுள்ளார்.