நயன்தாரா அந்த நேரத்தில் அப்படி பண்ணுவாங்கனு நினைக்கவே இல்ல - சரண்யா பளீச்!

Nayanthara Tamil Cinema
By Sumathi Jun 12, 2024 09:00 AM GMT
Report

நயன்தாரா குறித்து நடிகை சரண்யா மோகன் மனம் திறந்துள்ளார்.

சரண்யா மோகன்

தமிழில் 2008ல் வெளியான படம் யாரடி நீ மோகினி. இதில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், சரண்யா மோகன், மனோ பாலா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்தப் படம் தற்போதும் பலரது ஃபேவரைட் படமாக உள்ளது.

நயன்தாரா அந்த நேரத்தில் அப்படி பண்ணுவாங்கனு நினைக்கவே இல்ல - சரண்யா பளீச்! | Actress Saranya Mohan About Nayanthara Behaviour

இந்நிலையில் படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்த சரண்யா மோகன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வெண்மேகம் பாடலுக்கு சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது எனக்கு ரொம்பவே காய்ச்சலாக இருந்தது.

ஆனாலும் ஷூட்டிங் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் அங்கே போய் இருந்தேன். அங்கு வந்த நயன்தாரா என்ன ஆச்சு என்று கேட்க, நான் எனக்கு காய்ச்சல் என்று சொன்னேன். அந்த சூட்டிங் எல்லாமே ஒரு கிராமத்தில் எடுத்ததால் பக்கத்தில் ஹாஸ்பிடல் கிடையாது.

39 வயது.. வெளியுலகிற்கு தலைக்காட்டாத பாக்யராஜ் மகள் - தற்போதைய நிலை தெரியுமா?

39 வயது.. வெளியுலகிற்கு தலைக்காட்டாத பாக்யராஜ் மகள் - தற்போதைய நிலை தெரியுமா?

நயன்தாரா செயல்

உடனே நயன்தாரா அவருடைய அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு, நயன்தாராவின் கேரவனில் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டார். அதோடு சரண்யாவின் காட்சிகள் எப்போ வருகிறதோ அப்போ மட்டும் அவங்க வெளியே வந்தா போதும். அதுவரைக்கும் அவங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று அங்கிருந்த எல்லாரிடமும் சொல்லிவிட்டார்.

நயன்தாரா அந்த நேரத்தில் அப்படி பண்ணுவாங்கனு நினைக்கவே இல்ல - சரண்யா பளீச்! | Actress Saranya Mohan About Nayanthara Behaviour

நயன்தாரா இப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால் எனக்கும் அவங்களுக்கும் பெரிய அளவில் அறிமுகம் கிடையாது. ஒரு சில ஷாட் தான் நாங்கள் அந்த நேரத்தில் நடித்து இருந்தோம். ஆனாலும் அவர் நடந்து கொண்ட விதம் இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.