புகழ்ந்த மலையாள நடிகை - பரவசத்தில் திளைத்த கவிஞர் வைரமுத்து!
வைரமுத்துவை மலையாள நடிகை சம்யுக்தா பாராட்டியிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
வைரமுத்து
1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்திற்காக தன் முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்து இவர் எழுதிய எண்ணற்ற பாடல்கள் இன்றளவும் நின்று பேசுகிறது.

அவரது பாடல் வரிகளுக்கென தனிச் சிறப்புண்டு. பலரது காயங்களை தனது வரிகளின் மூலம் ஆற்றும் கலை அறிந்தவர் என்றால் மிகையல்ல. இந்நிலையில், தமிழில் தனுஷின் 'வாத்தி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சம்யுக்தா மேனன்.
நடிகை சம்யுக்தா
இப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் 'பூமராங்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, சம்யுக்தா தனக்கு கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் மிகவும் பிடித்தவை என்று பேட்டி ஒன்றில் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளம்
— வைரமுத்து (@Vairamuthu) October 13, 2022
நனைந்த தமிழில்
என் பாட்டு வரிகளை
நீ சொல்லச் சொல்லப்
பரவசமானேன் மகளே
தமிழும் மலையாளமும்
உறவு மொழிகள்
நாம்
கலையால் ஒன்றுபடுவோம்;
காலத்தை வென்றுவிடுவோம்#தமிழ் #Tamil #Malayalam@iamsamyuktha_ pic.twitter.com/UCwxnGjxEY
அதில் வைரமுத்து எழுதிய 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்' என்ற பாடல், 'காற்றே என் வாசல் வந்தாய்', 'கொஞ்சும் மைனாக்களே' உள்ளிட்ட பாடல் வரிகளை அவர் குறிப்பிட்டு பேசினார். இந்த காணொலியை கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், "மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு வரிகளை நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே, தமிழும் மலையாளமும் உறவு மொழிகள்; நாம் கலையால் ஒன்றுபடுவோம், காலத்தை வென்றுவிடுவோம்" என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil